தூத்துக்குடி – செப் – 07,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சிறைகைதி தப்பி ஓட்டம்
பல்வேறு மாவட்டங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற 33 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (37) என்பவர் விசாரணை கைதியாக பேரூரணி மாவட்ட சிறையிலிருந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்நோயாளியாக அனுமதிக்கப்ட்டு சிகிச்சையில் இருந்தவர் போலீஸ் காவலில் இருந்து 25.08.2021 அன்று அதிகாலை தப்பிச்சென்றவரை 04.09.2021 அன்று கைது செய்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், உதவி ஆய்வாளர் . செல்வன், நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர் கொடிவேல், கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதிகண்ணன், புளியம்பட்டி காவல் நிலைய காவலர்கள் மகேஷ், செண்பகராஜா, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு காவலர் தங்கராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த 5 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் இருவரை கைது செய்து களவு போன 20½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமை காவலர்கள் சிவசக்திவேல், மாணிக்கம், முதல் நிலை காவலர் கார்த்திகேயன் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சாமிக்கண் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
களவுபோன லாரி மீட்பு
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த லாரி திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 4 எதிரிகளை கைது செய்து களவு போன 5 லட்சம் மதிப்புள்ள லாரியை கைப்பற்றிய சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவலர் சுமித்ரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஏ.டி.எம் இல் திருட்டு பணம் மீட்பு
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாக்குளத்தை சக்திவேல் மகன் ராஜன் என்பவர் கடந்த 23.08.2021 அன்று செய்துங்கநல்லூர் பஜாரில் தனது மணிப்பர்ஸை தவற விட்டுள்ளார். மேற்படி பர்ஸை இனம் தெரியாத நபர்கள் எடுத்து பர்ஸிலிருந்த ATM கார்டை பயன்படுத்தி ரூபாய் 40,500/- மற்றும் பணம் ரூபாய் 1,500/- என மொத்தம் 42,000/- பணத்தை எடுத்துள்ளதாக மேற்படி ராஜன் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்து ATMல் பணத்தை எடுத்த நபர்களை கண்டுபிடித்து மேற்படி ATM கார்டு மற்றும் பணம் ரூபாய் 42,000/-த்தை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதிஷ் மற்றும் தலைமை காவலர் காசிராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குட்கா வழக்கில் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 1720 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து 2 எதிரிகளை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவன். முதல் நிலை காவலர் வைரமுத்து, காவலர் ராம்சுந்தர் மற்றும் தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
நீதிமன்ற பணிகளில் வேகம்
கடந்த ஓரு வார காலத்தில் முறப்பநாடு காவல் நிலையத்தில் 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 32 சாதாரண வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் 26 வழக்குகள் மீது நீதிமன்றத்தில் தண்டனை பெற்றும் தவக்கத்தில் இருந்த 5 பிடியாணை எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த முறப்பாநடு காவல் நிலைய தலைமை காவலர் அருணாசலம் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.