திருநெல்வேலி – செப் – 14,2021
திருநெல்வேலி டவுண் வ உ சி தெருவை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து டவுண் அரசு பேரூந்தில் வந்தார் டவுண் பொருட்காட்சி திடல் அருகே அவரின் பேக்கில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டது கீழே விழுந்ததை கவனிக்காத மாணவர் சிவகுமார் பல இடங்களில் தேடினார்.இந்நிலையில் செய்துங்கநல்லூரை சேர்ந்த லெட்சுமி என்பவர் பொருட்காட்சி திடலில் கீழே கிடந்த செல்போனை எடுத்து அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை காவல் உதவி ஆய்வாளர் தாமரை லிங்கத்திடம் ஒப்படைத்தார்.செல்போனை ஒப்படைத்த லெட்சுமியினை காவல்துறை சார்பாக காவல் உதவி ஆய்வாளர் பாராட்டினார்.மேலும் தொலைந்த செல்போனினை தொடர்பு கொண்ட மாணவர் சிவகுமாரினை நேரில் வர வைத்து செல்போனினை கொடுத்தார்.செல்போன் தொலைந்த அரை மணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் தாமரை லிங்கம் மற்றும் செல்போனை கண்டெடுத்து ஒப்படைத்த பெண்மணிக்கும் அந்த மாணவன் நன்றியினை தெரிவித்து சென்றான் உடன் தலைமை காவலர் கங்கா உடனிருந்தார்