78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி ரூ. 30,50,000/-மதிப்புள்ள 1000,கிலோ குட்கா பறிமுதல், ஒரு வாகனம் உட்‌‌‌பட 4 பேர்‌‌‌...

ரூ. 30,50,000/-மதிப்புள்ள 1000,கிலோ குட்கா பறிமுதல், ஒரு வாகனம் உட்‌‌‌பட 4 பேர்‌‌‌ கைது

திருச்சி – செப் -28,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவிநகர் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை மற்றும் கோட்டை காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடத்தில் வாகன சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மேற்படிவாகனத்தில் 64 மூட்டைகள் தடைசெய்யப்பட்ட குட்கா வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.30,50,000/- தடைசெய்யப்பட்ட மேற்படி குட்கா பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்தும், மேற்படி வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகாவை சேர்ந்த எதிரிகள் 1) சோமுசேகர் மற்றும் 2) மனோஜ்குமார் ஆகிய 2 எதிரிகளை கைது செய்து கோட்டை காவல் நிலைய குற்ற எண்.1035/2021-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மேற்படி குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் எதிரிகளின் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை சேர்ந்த 1) பாஸ்கர் & 2) முத்து என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை விற்பனை செய்த ரூ.3,00,000/- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.30,50,000/- (முப்பது லட்சத்து ஐம்பதாயிரம்) சந்தை மதிப்புள்ள மொத்தம் சுமார் 1000 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும், விற்பனை செய்து வைத்திருந்த ரூ.3,00,000/-ஐ (மூன்று லட்சம்) பறிமுதல் செய்தும், நான்கு பேரை கைது செய்த தனிப்படையினரை திருச்சிமாநகரகாவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.மேலும், திருச்சி மாநகரில் இது போன்று தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்ஆணையர் எச்சரிக்கை செய்துள்‌‌‌ளார்‌‌‌

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்