விழுப்புரம் – செப் – 20,2021
விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த TN 46 3953 என்ற டிராக்டர் சோதனை செய்ததில் 40 லிட்டர் சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 1920 பறிமுதல் செய்யப்பட்டு எதிரி
முரளி வ/31, த/பெ முருகேசன் விஸ்வரெட்டிபாளையம், விக்கிரவாண்டி என்பவரை கைது செய்தும் அவரிடம் இருந்த மதுபானகள், டிராக்டர் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ஓர் வழக்கு மதுரபாக்கம் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் விழுப்புரம் அமலாக்க பிரிவு ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த PY 01 AV 8004 காரை சோதனைச்செய்ததில் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 480 கடதிவந்த
எதிரி: அய்யனார் வ/ 23 த/பெ சேதுராமன், பழனி நகர், செட்டி பட்டு, புதுச்சேரி. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பாண்டி மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப் பட்டார்.