அரியலூர் – செப் -29,2021
அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சாலையில் உள்ள வாசவி லாட்ஜ் விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவல் மூலம் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மதன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ராஜவேல் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் 14.09.2021 அன்று நேரடியாக சென்று சோதனை செய்ததில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் கைது செய்து 4 பெண்களையும் தமிழ்நாடு அரசு மகளிர் காப்பகத்திலும் ஒப்படைத்தனர். பின்பு விடுதியின் ஏஜெண்டாக செயல்பட்ட திரு. வெற்றிகண்ணன் (37/21), த/பெ. சண்முகம், சிவன் சன்னதி தெரு, கீழப்பழுவூர் மற்றும் தரகராக செயல்பட்ட வாட்ச்மேன் திரு. சேகர் (55/21) த/பெ. மருதை, கீழஅரசூர், லால்குடி, திருச்சி மாவட்டம் ஆகிய 2 நபர்களையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்கண்ட தங்கும் விடுதிக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார். இதன்பேரில் அரியலூர் துணை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் அரியலூர் கோட்டாட்சியர் மற்றும் அரியலூர் காவல்துறையினர் நேரில் சென்று மேற்கண்ட வாசவி லாட்ஜிற்கு இன்று சீல் வைத்தனர்.