தூத்துக்குடி – செப் -28,2021
20,போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஆயுள்தண்டனை
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கின் எதிரிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, காவலர் ஆறுமுக பாண்டியன், பசுவந்தனை காவல் நிலைய காவலர் சுடலைமணி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மணல்திருட்டு
தட்டப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருடிய 3 எதிரிகளை கைது செய்து 1 டாரஸ் லாரி, ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்த தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன், முத்துகிருஷ்ணன், முதல் நிலை காவலர் கதிர்வேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கொலை குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கின் முக்கிய எதிரியை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் . பிரடரிக் ராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் . காசி, புதூர் காவல் நிலைய காவலர் பிரபுபாண்டியன், தூத்துக்குடி ஆயுதப்படை வாகனபிரிவு காவலர் கணேசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கஞ்சா ரேஷன் அரிசி கடத்தல்
சதூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரி அருகில் சுமார் 10½ கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த எதிரியை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்தும், 7100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 டெம்போ டிராவலர் வாகனங்களை கைப்பற்றி 1 எதிரியை கைது செய்து உணவு பொருள் பாதுகாப்பு பிரிவில் ஒப்படைத்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துபாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில், திருமணிராஜன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
14,ஆண்டுகளுக்குபின் சிக்கிய குற்றவாளி
எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கின் 4வது எதிரிக்கு கடந்த 2007ம் ஆண்டில் இருந்து சார்பு செய்யப்படாமல் இருந்த நிலையில் திருப்பூரில் பெயர் மாற்றம் செய்து குடியிருந்து வந்த நபரை தேடி கண்டுபிடித்து 14 ஆண்டுகளுக்கு பின் மேற்படி எதிரிக்கு சம்மன் சார்பு செய்த எட்டையாபுரம் காவல் நிலைய காவலர் லெட்சுமி நாராயணன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.