கோயம்புத்தூர் – செப் – 21,2021
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட அலுவலகம், காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை இயங்க கூடிய அனைத்து சிறப்பு பிரிவு அலுவலகங்களிலும் நுழைவாயிலில் பொதுமக்கள் கருத்து பெட்டி வைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த கருத்து பெட்டி முறை தொடங்கி சில நாட்களே ஆனதாலும், பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை சரியாக தெரிவிக்காத காரணத்தினால், பொதுமக்களின் பயன்பாடு கருதி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் பொதுமக்கள் கோவை மாவட்ட காவல்துறை சமூக வலைத்தளங்கள் (twitter)@cbedtpolice, (Facebook)@Coimbatore District Police
(Instagram)@Coimbatore district police சென்று Feedback Form -ஐ பதிவிறக்கம்(Download) செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையம் பற்றி பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். உங்களுடைய குறைகளை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் உங்களின் படிவத்தை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்து உங்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படுவதோடு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தின் அணுகுமுறை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவி்த்துள்ளார்.