இராணிபேட்டை – செப்-01,2021
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்காக இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி தலைமையிலான காவலர்களுக்கும் மேலும் வாலாஜா காவல் நிலையத்தில் புகாரான திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கைதிகளை விரைந்து கைது செய்ததற்காக இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் அவர் தலைமையிலான உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர்கள் ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ. கா. ப. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.