தூத்துக்குடி – செப் -17,2021
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனைமர விதைகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பனை மரம் வளர்ப்பது பல வகைகளில் மிகவும் பயனள்ளதாக இருக்கும். பனைமரம் அதன் நுனியிலிருந்து வேர் வரை பல வகைகளில் நமக்கு பயன்தரகூடியதாகும். பனை மரங்களை மணற்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வளர்ப்பதன் மூலம் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும். ஏனென்றால் ஆணி வேரை விட பக்கவாட்டில் செல்லக்கூடிய சல்லி வேர்கள் அதிகம். இதனால் மண்வளம் மற்றும் நீர்வளம் அதிகரிக்கும். விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயன்களை தரக்கூடியது. பனைமர விதைகள் விதைப்பதன் மூலம் வரும் தலைமுறைகளுக்கும் மிகவும் பயன்தரக்கூடியதாகும். ஆகவே அனைவரும் பனைமர விதைகளை வளர்த்து பயன்பெறுவோம்.
மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
மேற்படி நிகழ்ச்சிகளின் போது கோவில்பட்;டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலிப், பால் உட்பட காவல்துறையினர் மற்றும் கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, விவசாய அணி தலைவர் பிரேம்குமார், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் காளியப்பன், கயத்தாறு ஒன்றிய தலைவர் சின்னபாண்டியன், காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, சவலாப்;பேரி பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி, வில்லிசேரி பஞ்சாயத்து தலைவர் வேலன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.