கன்னியாகுமரி – செப் -03,2021
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள இளைஞர்கள் விளையாட விளையாட்டு மைதானம் இல்லை. இந் நிலையில் கடந்த 19.06.2021 அன்று குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு பூங்காவை திறந்து வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் IPS வந்திருந்தார் அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் விளையாட மைதானம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதனை கனிவுடன் கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரின் தீவிர முயற்சியால் அந்த குடியிருப்பில் காலியாக கிடந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு அழகிய விளையாட்டு மைதானம் உருவாக்கபட்டது. அதனை இன்று திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும் அங்கு உள்ள இளைஞர்கள், சிறுவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.