தூத்துக்குடி – செப்-01,2021
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் அவர்களது குடும்பத்திற்கு காவலர் காப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கடந்த ஆண்டு 22ம்தேதி அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு காவலர் காப்பீட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி ரூபாய் 2 லட்சத்திற்கான வரைவோலையை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியனின் மனைவி மற்றும் வாரிசுதாரரான சுப்புலெட்சுமி என்பவரிடம் வழங்கி, அவர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சுப்பையா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.