கிருஷ்ணகிரி – செப்- 11,2021
கொலை வழக்கில் 5 வருடங்களாக மும்பையில் தலைமறைவாக இருந்த நபரை அதிரடியாக கைது செய்த போச்சம்பள்ளி காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி,இ.கா.ப. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் குற்ற எண்.365/2016 U/S 294(b),341,323,324,506 (ii) IPC @307 IPC @ 302 IPC கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த நபரை அதிரடியாக மும்பையில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய சீர்மிகு பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் அவர்கள்,காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் முதல் நிலை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் அப்துல்சலாம் ஆகிய காவலர்களுக்கு
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.