93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி குற்றங்களை தடுக்க புதிய 20,சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்.

குற்றங்களை தடுக்க புதிய 20,சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி – செப் -10,2021

குற்றங்களை தடுக்கும் வண்ணம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி பொருத்தி அதனை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

திருநெல்வேலி மாவட்டதில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS.,  பொறுப்பேற்ற நாள்‌ முதல் பல முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர் நடவடிக்கையாக இன்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் , உடனுக்குடன் குற்ற சம்பவ இடங்களை சென்று விசாரணை செய்யவும் அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், IPS.,  அறிவுரையின்படி செல்லாயி அம்மன் கோவில் 3 கேமராக்களும், தெப்பக்குளம் முதல் தெருவில் 2, தெப்பக்குளம் இரண்டாம் தெருவில் 2, சிவன் கோவில் தெரு 2, கருங்குளம் விலக்கில் 2, பிள்ளையார் கோவில் 3, மேலத்தெரு அளவு சமன் தெருவில் 2, பலவேச அம்மன் கோவில் தெருவில் 2, வெற்றி விநாயகர் கோவில் 1 , ஆகிய 9 இடங்களில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை திருநெல்வேலி‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ மணிவண்ணன் IPS.,  இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் .சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்