கோயம்புத்தூர் -செப்,14,2021
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் துறையினர் இணைந்து இணையதள மோசடி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் எடுத்துள்ளனர். அக்குறும்படத்தை இன்று மாவட்டக் காவல் அலுவலகத்தில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., இவ்விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி மற்றும் கோவை மாவட்டக் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை…. பொதுமக்களே!!! விழித்திருக்க வேண்டியது நமது திறமை…
நீங்கள் இணையதளத்தில் பணத்தை இழந்தவரா!!!! பதட்டம் வேண்டாம்…உடனே அழைத்திடுங்கள் 155260….
பயன் அடைவதற்கு மட்டுமே இணையதளம்… பணத்தை இழப்பதற்கு அல்ல…
முகநூல் பக்கம் மூலம் உங்களுடன் பழகுபவர்கள் அனைவரும் உங்களுக்கு முகம் தெரிந்தவர்கள் அல்ல…. உஷாராக இருந்திடுங்கள்… உருக்கமான வார்த்தைகளை நம்பாதீர்கள்…
சமூக வலைத்தள மோசடிகளுக்கு உடனே அழைத்திடுங்கள் 155260,77081-00100, 94981-81212…