திண்டுக்கல் – செப் – 03,2021
பழனி பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை கண்டுபிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த மாதம் பேருந்து நிலையத்தில் அனாதையாக பெண் குழந்தை ஒன்று இருந்ததை கண்ட காவல்துறையினர் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி தனிப்படையினர் அமைக்கப்பட்டு குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையடுத்து குழந்தையை விட்டுச்சென்ற நபர்களை இராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.