76.9 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்.பி தலைமையில் காவலர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி எஸ்.பி தலைமையில் காவலர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது

தூத்துக்குடி – செப் -30,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி ’உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற இந்த குறை தீர்ப்பு முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வரை மொத்தம் 113 பேர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தவர்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலமாக பதில் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த காவலர் குறை தீர்ப்பு முகாமில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்