93.1 F
Tirunelveli
Tuesday, May 24, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடியால் தடுக்கபட்ட பழிக்குபழி கொலை

போலீஸ் கமிஷனர் அதிரடியால் தடுக்கபட்ட பழிக்குபழி கொலை

திருச்சி – செப் -26,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப.,  மேலான உத்தரவின்பேரில், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, மேற்கொண்டு கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ரவுடிகள்‌‌‌  கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை 11.30 மணியளவில், திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் மணல்மேடு அருகில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த இரண்டு நபர்களான 1) தட்சினாமூர்த்தி, வயது 20/21, த/பெ. முருகன், எமர்.33-சி, 5-வது பிரகாரம், மணல்மேடு, திருவானைக்கோவில், திருச்சி மற்றும் 2) சுரேஷ், வயது 33/21, த/பெ.கணேசன், வடக்கு 5-வது பிரகாரம், மணல்மேடு, திருவானைக்கோவில், திருச்சி என்றும், அவர்களை சோதனை செய்ததில் வெட்டுவாள்-1 மற்றும் அருவாள்-1 ஆகியவற்றை வைத்திருந்தவர்களை தனிப்படையினர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இரண்டு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், கடந்த 26.10.2020-ஆம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்மேடு, மேல விபூதி பிரகாரம், திருவானைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் நடந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய கு.எண். 886/2020 ச/பி 147, 148, 342, 294(பி), 307, 302 இதச-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் புலன்விசாரணையில் மேற்படி வழக்கின் சட்டப்பிரிவுகள் 120(8) IPC, 3(i)(r), 3(i)(s), 3(i)(v) of SC/ST Act-ன்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை, இறந்துபோன முருகன், த/பெ.வடிவேல் என்பவரின் மகள் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து மேற்படி வழக்கின் குற்றவாளிகளை பழிதீர்க்கும் நோக்கத்தோடு அவர்களை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தனர். பின்னர், அதன் உண்மைதன்மை கண்டறியப்பட்டு மேற்படி எதிரிகள் தட்சிணாமூர்த்தி மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலைய கு.எனர். 795/2021 u/s 25(1)(a) and 27 of Indian Arms Act, 1959-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காவல் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பழிக்குபழி வாங்கும் நிகழ்வாக நடைபெற இருந்த கொலை சம்பவம் உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது. கொலை சம்பவத்தை தடுத்து அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர்  வெகுவாக பாராட்டினார்

இனிவருங்காலங்களில் இதுபோன்று பழிவாங்கும் எண்ணத்துடன் சட்டத்திற்கு புறம்பாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மார்கெட்டில் முன்விரோத கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

0
நெல்லை மாநகரம் - மே-23,2022 நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

“குவாரியில் சிக்கியிருந்த 4,நபர்களின்‌‌‌ உடல்கள் 8,நாட்களுக்கு பிறகு காவல்துறை, தீயனைப்புதுறை மற்‌‌‌றும்‌‌‌...

0
திருநெல்வேலி - மே -23,2022 திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்...

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

0
விழுப்புரம் - மே- 23,2022 அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 20,21,22 ஆகிய...

இறகுபந்து போட்டியில்‌‌‌ தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!

0
மதுரை - மே-23,2022 திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில்‌‌‌ உயிழந்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2500 போலீசார்‌‌‌...

0
தூத்துக்குடி - மே -20,2022 தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

தற்போதைய செய்திகள்