திருச்சி – செப்-02,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகர சாலைகளில் பெருகி வரும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையின் ஒழுங்குப்படுத்தவும், சாலை விதிகளை அமல்படுத்தவும் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், போக்குவரத்து தெற்கு மற்றும் வடக்கு ஆகியோர் தலைமையில் 4 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 350 காவலர்கள் கொண்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் சிக்னல் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அவசர கால ஊர்திகள் மற்றும் விபத்து போன்ற நிகழ்வுகளின்போது அப்பகுதியில் உள்ள போக்குவரத்து காவலர்களின் மூலம் போக்குவரத்து இடையூறு இல்லாமல் உடனுக்குடன் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு பொதுமக்களின் சுமுக பயணம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு அவ்வப்போது சாலை விதிகள் மற்றும் கொரோனா நோய்நொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், ஒலிபெருக்கியின் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சாலை விதிகள் மற்றும் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீறி செயல்படுவோர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பான பணிகளை செய்வோர்கள் கண்டறியப்பட்டு. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார் இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமை தபால்நிலையம் பகுதியின் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த கண்டோண்மென்ட் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு முதல்நிலைக்காவலர் ஜலாலுதீன் என்பவர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவசியத்தையும், கொரோனா’ நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு மற்றும் அவசர வாகனங்கள் வழிவிடுதலின் அவசியம் பற்றி பொதுமக்களுக்கு புரியும்படி எளிமையான நடையில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பொதுமக்களிடையே நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது பணியை பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் தேரில் அழைத்து பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்