திருநெல்வேலி – செப் -19,2021
நெல்லை மாநகரில் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் நிர்வாகிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்திய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்கள்ரமேஷ் கண்ணன் பிறைச்சந்திரன், திருநெல்வேலி ரோட்டரி கிளப் முன்னாள் ஆளுநர் ஆறுமுகப்பாண்டியன் லயன்ஸ் கிளப் ஆளுநர் விஸ்வநாதன் , லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் சுதந்திர லட்சுமி , திருநெல்வேலி கிரீன் சிட்டி தலைவர் திருமலை முருகன் மற்றும் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில், நெல்லை மாநகர பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செய்யவேண்டிய வழிவகைகள் மற்றும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் விதத்தில் மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்களை, அமைக்க தங்களது பணிமிக முக்கியம் எனவும், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஆற்றிய சமூக பணிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிளப் உறுப்பினர்களின் கருத்துக்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் கேட்டறிந்தார்