சேலம் – செப்- 04,2021
சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியூர், பெருமாள் கரடு அடிவாரத்தில் சேலம் மாநகர காவல்துறைக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் தளத்தினை இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் .நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கி வைத்தார். இவ்விழாவில் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் மகேஸ்வரி,I.P.S., , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்,I.P.S., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஷ்வி,I.P.S., தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்,I.P.S., சென்னை கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளர் K.P.S. ஜெயச்சந்திரன் , தமிழ்நாடு சிறப்பு காவல் படை போச்சம்பள்ளி தளவாய் பாண்டியராஜன் மற்றும் காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சேலம் சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையேயான குண்டு சுடும் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காவல் உயர் அதிகாரிகளுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோப்பை வழங்கி கௌரவித்தார்.