86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்த நெல்லை எஸ்.பி தொடர் முயற்சி

பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்த நெல்லை எஸ்.பி தொடர் முயற்சி

திருநெல்வேலி – செப் – 18,2021

சமூக நல்லிணக்கம் குறித்து முன்னீர்பள்ளம் தருவை, மேலச்செவல் கீழச்செவல், கோபாலசமுத்திரம், செங்குளம், கொத்தன்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல் முன்விரோதபோக்கை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முன்னீர் பள்ளம், தருவை, கீழச்செவல்,மேலச்செவல், கொத்தன்குளம், கோபாலசமுத்திரம், செங்குளத்தை சேர்ந்த பொதுமக்களிடம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ‌.கா.ப., தலைமையில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், இ.கா.ப., பொது மக்களுடன் கலந்துரையாடினார், அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் எனவும் மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களை முறையாக நல்வழிபடுத்த வேண்டும் என்றும் குழந்தைகளை சாதி, மத, பேதமின்றி வளர்கவும், தங்கள் குழந்தைகளை குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களில் உயர்ந்த நிலையை அடையவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பாடுபடவேண்டும் எனவும் மேலும் பொதுமக்களாகிய நீங்கள் முன்வைக்கும் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் மாவட்ட காவல் துறை மூலம் அரசுக்கு எடுத்து வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் மேற்படி பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் கண்டால் அவர்களின் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு கூட்டத்தில் உயர் அதிகாரிகள், துணைகாவல் கண் காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்