திண்டுக்கல் – செப் -20,2021
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியபட்டி யானை விழுந்தான் ஓடை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 18.09.2021 அன்று வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஜெரால்ட் தங்கராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்த கிடந்த நிலையில் சந்தேக மரணம் என்ற வழக்கில் கொலை என கண்டறியப்பட்டு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஊரக உட்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் அம்பாத்துரை காவல் நிலைய போலீசாரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் சென்று வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் கபிலன், இ.கா.ப. மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா அவர்களும் கலந்து கொண்டனர்