கோயம்புத்தூர் – செப் – 14,2021
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி மேற்பார்வையில் கோவை மாவட்டத்தில் புதியதோர் விடியலை உருவாக்கிட “விடியல்” என்ற தலைப்பின் கீழ் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டம் பற்றி தெரிந்து கொள்வதற்கும் நீங்கள் மன அழுத்தம் உள்ளவராபோதைக்கு அடிமையானவரா தற்கொலை எண்ணம் கொண்டவரா??கவலை வேண்டாம்.. கலங்காமல் அழைத்திடுங்கள் 0422-2300999… நாங்கள் காத்திருக்கிறோம் உங்களுக்கான விடியலை உருவாக்கிட என்று பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புதியதோர் விடியலை உருவாக்கியுள்ளார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வாழ்க்கையில் மரணத்தை தவிர மறு வழியில்லை என்ற மனநிலையில் உள்ளவரா நீங்கள்? மறவாமல் அழைத்திடுவீர்…0422-2300999..
பிரச்சினைகளைக் கண்டு வீழ்ந்து விடாதே தீர்வு தந்து விடியலை உருவாக்குகிறோம் கோவை மாவட்டக் காவல்துறையினர்..