கன்னியாகுமரி – செப்-30,2021
“உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்களின் குறை தீர்க்கும் முகாம்…. குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கன்னியாகுமரி மாவட்டம் இன்று காலை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS கலந்து கொண்டு 180 காவல் அதிகாரிகள், ஆளினர்களின் இடமாறுதல், சிறு தண்டனைகள், ஊதிய முரண்பாடுகள், பதவி உயர்வு போன்ற அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டு அறிந்த அவர் அதனை சரி செய்வதாக உறுதியளித்தார். இந்த முகாமில் குறைகளை உடனே தீர்ப்பதற்கு அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் குறைகள் உடனே தீர்க்க உத்தரவிட்டார். இன்று மொத்தம் 180 காவல் துறையினரின் 189 மனுக்கள் பெறப்பட்டது. அவைகள் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.