78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் விடிய விடிய தீவிர சோதனை - 47,ரவுடிகள் பயங்‌‌‌கர ஆயுதங்களுடன் சிக்‌‌‌கினர்‌‌‌

தூத்துக்குடியில் விடிய விடிய தீவிர சோதனை – 47,ரவுடிகள் பயங்‌‌‌கர ஆயுதங்களுடன் சிக்‌‌‌கினர்‌‌‌

தூத்துக்குடி – செப் – 24,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து  47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  நேற்று (23.09.2021) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது, வாகன சோதனையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பாராட்டினார்.

இந்த தீவிரப்பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்