அரியலூர் – செப்-06,2021
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 135 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பொது ஏலம் விடப்பட்டு 13,19,720/- ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரபடாமல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 135 வாகனங்கள் மீது உரிமை கோரி இதுநாள் வரை யாரும் ஆதாரங்களை சமர்ப்பிக்க படாததால் உரிமை கோரப்படாத 135 வாகனங்களை அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணாசரஸ்வதி, இ.ஆ.ப., ஏலம் விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொது ஏலம் நிர்ணய குழு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்தார்கள். 5 நபர்கள் கொண்ட இந்த குழுவில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் மண்டல துணை இயக்குனர் மோட்டார் வாகன பராமரிப்பு துறை திருச்சிராப்பள்ளி அவர்கள் துணைத் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராக தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்பு துறை திருச்சிராப்பள்ளி அவர்களும், உறுப்பினர்களாக மதன், காவல் துணை கண்காணிப்பாளர், அரியலூர் உட்கோட்டம் அவர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை – I மண்டல போக்குவரத்து அலுவலர் அரியலூர் மற்றும். தொழில்நுட்ப அதிகாரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அரியலூர் ஆகியோர் முன்னிலையில், மணவாளன், துணை காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை அரியலூர் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரபடாமல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 135 வாகனங்களும் இன்று காலை 10.00 மணிக்கு 208 டோக்கன்கள் வழங்கப்பட்டு பொது ஏலம் தொடங்கப்பட்டது. மாலை 04.00 மணி அளவில் அனைத்து வாகனங்களும் ஏலம் விடப்பட்டது . இதில் 135 வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த 2,81,750/- ரூபாய்க்கு மேலாக 13,19,720/- ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு அரசு ஆதாயம் ஆக்கப்பட்டு அரியலூர் அரசு கருவூலத்தில் தொகையானது ஒப்படைக்கப்பட்டது. இதில் காவல்துறை சார்பில் விஜயகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையகம், அரியலூர். மேற்பார்வையில் சபரிநாதன் துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.