80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சமுகவிரோத செயல்கள் குறித்த தகவல்தெரிவிக்க ஓட்நர்களுடன் மாவட்ட எஸ்.பி முக்‌‌‌கிய ஆலோசனை

சமுகவிரோத செயல்கள் குறித்த தகவல்தெரிவிக்க ஓட்நர்களுடன் மாவட்ட எஸ்.பி முக்‌‌‌கிய ஆலோசனை

தூத்துக்குடி -செப் -27,2021

தூத்துக்குடி ராசி மஹாலில் இன்று பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் – காவல்துறைக்கு உறுதுணையாக சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள்.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை சார்பாக மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராசி மஹாலில் இன்று பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோரை அழைத்து தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், நீங்கள் அனைவரும் காவல்துறையினரைப் போலவே ஆங்காங்கே சுற்றிக் கொண்டு வருபவர்கள், உங்களுக்கு நகரில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களுக்கு தென்படும், அவ்வாறு தென்படும் பட்சத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தெரியவந்தாலோ, தங்களது வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் எவரேனும் பயணம் செய்வதாக இருந்தாலும், சட்டவிரோதமாக துப்பாக்கி, கத்தி, அரிவாள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை எடுத்து செல்வதாக இருந்தாலோ காவல்துறையின் அவசர இலவச தொலை பேசி எண். 100 அல்லது மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 95141 44100 என்ற எண்ணிற்கோ தகவல் அளிக்கலாம், இதில் வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தரக்கூடிய வசதியும் உள்ளது.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், மோட்டார் வாகன விதிமுறைகளை முழுவதுமாக கடைபிடிப்பதுடன் கண்டிப்பாக சீருடை அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும், தனியார் வாகன ஓட்டுனர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று போன்றவற்றை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக தொலைக் காட்சி பெட்டிகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக திரைப்படங்களோ, பாடல்களோ ஒளிபரப்பவோ, இசைக்கவோ கூடாது. முக்கியமாக சமூதாயம் சார்ந்த பாடல்களோ, படங்களோ கண்டிப்பாக இருக்கக்கூடாது உட்பட பல்வேறு கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு, கலந்தாய்வுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துக்களை பின்பற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் . மயிலேறும்பெருமாள், தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், நவநீத கிருஷ்ணன், மத்தியபாகம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்