79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி கள்ளச்‌‌‌சாரய தொழிலை நிறுத்‌‌‌திவிட்டு மனம்‌‌‌திருந்‌‌‌தி வாழும் நபர்களுக்கு ஐ.ஜி மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு

கள்ளச்‌‌‌சாரய தொழிலை நிறுத்‌‌‌திவிட்டு மனம்‌‌‌திருந்‌‌‌தி வாழும் நபர்களுக்கு ஐ.ஜி மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு

புதுக்கோட்டை – செப் -08,2021

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி
வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, ஜெரினா பேகம் மற்றும் ஆலங்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல், அகல்யா மனநல மருத்துவர், மாரி தாசில்தார் கலால்துறை, ஆலங்குடி தாலுகா இலவச சட்ட உதவி மையம் உறுப்பினர் வெங்கடேஷ், மாவட்ட மேலாளர் டாஸ்மார்க் வசுந்தராதேவி, புதுக்கோட்டை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்ஆய்வாளர் குணமதி, காவல் உதவி ஆய்வாளர்கள் துர்காதேவி, ஆனந்தன் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கிருஷ்ணம்பட்டி கிராம பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், கிராமத்தில் கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு தற்பொழுது மனம் திருந்தி வாழ்ந்து வரும் பயனாளிகள் சந்திரா ராஜப்பன், தனபால், பவுன்ராஜ் ஆகியோருக்கு தென்னை மரக் கன்று நமது மத்திய மண்டல காவல்துறை தலைவர் வழங்கினார்‌‌‌ . மேலும் கறம்பக்குடி ரீனா மெர்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தி யும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நமது காவல்துறை தலைவர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. கிராம பொது மக்களுக்கு கிராம கலைக்குழு, மூலம் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கியும், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நமது காவல்துறை தலைவர் அவர்களுக்கு கிருஷ்ணம்பட்டி கிராம பொதுமக்கள் மரியாதை செலுத்தியும் கௌரவித்தார். மேலும் அக்கிராம மக்கள் நமது மத்திய மண்டல காவல்துறை தலைவருக்‌‌‌கு தங்களது கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதற்கு நன்றியும் தெரிவித்தார்‌‌‌

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்