94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

தூத்துக்குடி – செப் – 15,2021

தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் சிறப்புரையாற்றுகையில், கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக அளவு பதக்கங்கள் பெற்றுள்ளது. தற்போது விளையாட்டுப்போட்டி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று, தோல்வியடைந்துவிட்டால் மனம் தளராமல், மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு அடுத்த முறை வெற்றி பெற்றுவிடலாம் என்ற விடா முயற்சியுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு விளையாட்டும் முக்கியமானது. தேர்வுகளில் தோல்வியடையும் சில மாணவ, மாணவிகள் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை முடிவு எடுக்கின்றனர், இது முற்றிலும் தவறு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் பங்கேற்பதன் மூலம் வெற்றி, தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு மன தைரியம் வரும். மாணவ, மாணவிகள் கல்வியுடன் சேர்த்து இதுபோன்ற போட்டிகளிலும் அதிக அளவில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பேட்ரிக், தூத்துக்குடி மாவட்ட தடகள கழக செயலாளர் . பழனிச்சாமி, பொருளாளர் அருள்சகாயம் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், தென்பாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்