சென்னை – செப் -23,2021
அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:–
ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக்காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி மகேந்திரகுமார் ரத்தோட், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ஐஜி கார்த்திகேயன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராகவும், திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த ஐஜி அருண் சென்னை போலீஸ் பயிற்சிக்கல்லூரி ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கட்டாயக்காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி சரவணன் சுந்தர் திருச்சி சரக டிஐஜியாகவும், திருச்சி டிஐஜி ராதிகா சென்னை பொதுப் பிரிவு டிஐஜியாகவும், நிஷா கட்டாயக்காத்திருப்போர் பட்டியலில் இருந்து சென்னை நகர கம்ப்யூட்டர் மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சேலம் மாநகர குற்றம், போக்குவரத்துப்பிரிவு துணைக்கமிஷனர் வேதரத்தினம், சென்னை டிஜிபி அலுவலக எஸ்டாபிலிஷ்மென்ட் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.