94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

தூத்துக்குடி – செப் -23,2021

கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பழைய பேரூந்து நிலையம் அருகிலுள்ள தனலெட்சுமி என்ற ஹோட்டலில் நேற்று இரவு (22.09.2021) கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கனகவேல் மகன் சிவராமன் (25), அவரது நண்பர்களான பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன் (28) மற்றும் கோவில்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் மகன் பிரசாத் (29) ஆகிய மூவரும் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர். இவர்களுக்கு பக்கத்து மேசையில் சாப்பிட்டு கொண்டிருந்த கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர்களான பால்ராஜ் மகன் அருண்குமார் (30) அவரது நண்பர்களான மாரிச்செல்வம் மகன் பால்ராஜ் (23), வெயிலுமுத்து மகன் நாகராஜ் (23), முத்துராமலிங்கம் மகன் அஜித்குமார் (21) மற்றும் அந்தோணிபாண்டியன் மகன் சங்கரநாரயணன் (27) ஆகிய 5 பேரும் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர்.

இதில் சிவராமன் தரப்பினர் மேற்படி ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார்கள் என்பதால் அக்கடை ஊழியர்களுடன் சிரித்;து பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதை பார்த்த அருண்குமார் தரப்பினர் தங்களை பார்த்துதான் சிவராமன் தரப்பினர் சிரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்து மேற்படி சிவராமன் தரப்பினரை அருண்குமார் தரப்பினர் சத்தம்போட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு இருதரப்பினரும் ஒருவரையொருவர் தவறாக பேசி அங்கிருந்த சேர், குழம்பு வாளியால் தாக்கி கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருதரப்பினரும் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுபடுத்தும் பொருட்டு ரவுடிகள், போக்கிரிகள் மற்றும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (22.09.2021) இரவு முதல் இன்று (23.09.2021) காலை வரை 65 ரவுடிகள் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு, வருடம் முழுவதுமே குண்டர் தடுப்பு சட்டத்தில் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலைடக்கப்படுவார்கள்.

மேலும் கொரோனா பெருந்தொற்று முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அரசு ஊடரங்கு அறிவத்துள்ளதால், வரும் 26.09.2021 அன்று நடைபெறும் வெங்கடேச பண்ணையார் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்தவோ, ஊர்வலம் செல்லவோ அனுமதி இல்லை, மேலும் நினைவு தினத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து வருவதற்கு அனுமதி இல்லை, தடையை மீறி வருவபர்கள் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்ட்டுள்ள காவல்துறை சோதனை சாவடிகள் மூலம் தடுத்து நிறுத்தப்படுவார்கள். நினைவு தினம் அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 10 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர். ஸ்டீபன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் தனிப்பிரிவு தலைமை காவலர் சேதுராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்