80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் சென்னை "மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்‌‌‌கள்‌‌‌ கட்‌‌‌டுபாட்‌‌‌டு அறை காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ பாராட்‌‌‌டு....

“மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்‌‌‌கள்‌‌‌ கட்‌‌‌டுபாட்‌‌‌டு அறை காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ பாராட்‌‌‌டு….

சென்னை – செப் – 10,2021

பொதுமக்களின் அவசர காவல் உதவி தொலைபேசி எண் 100ல் புகார்களை பதிவு செய்தால் சம்பவ இடத்திற்கு குறைந்த நேரத்தில் காவல் ரோந்து வாகனங்கள் சென்று நடவடிக்கை எடுக்க உதவிடும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, எழும்பூர், பழைய காவல் ஆணையரகத்தில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டறையில் (State Police Control room) அவசர காவல் உதவி எண்.100 மையம் 24 மணி நேரம் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் உடனடி தேவைக்காக அவசர காவல் உதவி தொலைபேசி எண்.100ஐ தொடர்பு கொள்ளும்போது, மாநில கட்டுப்பாட்டு அறையில் தகவல்களை பெற்று, சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அறிவுரைகளின்பேரில், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்‌‌‌ லோகநாதன், இ.கா.ப., நேரடி கண்காணிப்பில், நவீன கட்டுப்பாட்டறை துணை ஆணையாளர் ராமர், இ.கா.ப., தலைமையில், சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வரும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மண்டலங்கள் மற்றும் போக்குவரத்து வடக்கு மற்றும் தெற்கு காவல் மண்டலங்கள் ஆகிய 6 கட்டுப்பாட்டு அறைகள் நவீன மயமாக்கப்பட்டு, பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில், கடந்த 2 மாதங்களில், பொதுமக்கள் அளிக்கும் காவல் உதவி எண்.100 புகார்களில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட புகார்கள் மீது, காவல் ரோந்து வாகனங்கள் 5 நிமிடங்களுக்குள் (Response time 100 Calls) விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் 10.7.2021 அன்று முதல் கட்டுப்பாட்டறை புகார்கள் மீது மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் (Response time) காரணமாக தமிழக காவல்துறையின் அனைத்து மாவட்டங்களின் தரவரிசையில் 6வது இடத்தில் இருந்த சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டறை, தற்போது தரவரிசையில் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும், MDT எனப்படும் மொபைல் டேட்‌‌‌டா டெர்‌‌‌மினல்‌‌‌ என்ற கருவி சென்னை பெருநகரில் உள்ள 354 ரோந்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டு ரோந்து வாகனங்கள் நிலை கொண்டுள்ள இடம், செல்லும் திசைகள் கண்டறியப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உதவி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து MDT கையாள்வதற்கு தகுந்த பயிற்சி (Training for MDT Operating System) அளிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு காவல் குழுவினரால் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் திறம்பட பணி செய்து, பொதுமக்களின் அவசர உதவி 100 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு சட்டம் & ஒழுங்கு மற்றும் போக்குவரத்து வடக்கு, தெற்கு கட்டுப்பாட்டறைகளின் ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,இ.கா.ப., இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்