86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் அரியலூர் "அரியலூரில் போலி நீதிபதி கைது மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை....

“அரியலூரில் போலி நீதிபதி கைது மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை….

அரியலூர் – செப் – 11,2021

அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது.

அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமம் நடுதெருவில் வசிக்கும் கண்ணன் மனைவி செல்வி என்பவர் தனக்கும் தன் சித்தப்பாவிற்க்கும் இடப்பிரச்சனை இருந்து வந்ததாகவும் கடந்த 06.04.2021 ஆம் தேதி தன் சித்தப்பா இறந்து விட்டதாகவும், இந்நிலையில் பார்ப்பனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை வியாகுலம் என்பவர் வீட்டிற்கு வந்து தான் இசைவு தீர்ப்பாயத்தில் இருந்து வருவதாகவும் அது கோர்ட் மாதிரி நான் தான் ஜட்ஜ் இந்த இடம் சம்மந்தமாக மாரியம்மாள் மனு கொடுத்துள்ளார் “நான் தான் ஜட்ஜ் நான் கொடுப்பதுதான் தீர்ப்பு நீங்கள் உங்கள் டாக்குமெண்டை கொடுங்கள் என்றும் நோட்டில் கையெழுத்து போடுங்கள் இல்லை வீட்டை காலி பண்ணு என்று மிரட்டியுள்ளார் இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் ரூபாய் 100/- முத்திரைத்தாளில் தீர்ப்பு அளித்துவிட்டதாக பல்வேறு சங்கதிகளை உள்ள தீர்ப்பு ஒன்றை அனுப்பியதாகவும் தனக்கு மரியசூசை வியாகுலம் யார் என்றே தெரியாது என்றும் சொத்து சம்பந்தமாக எந்த பிரச்சனையும் தீர்க்கக் கோரி அவரிடம் முறையிடவில்லை என்றும் மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பெரோஸ்கான் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்ற பிரிவில் 19.08.2021 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் எதிரி மரியசூசை வியாகுலம் என்பவர் தன்னிச்சையாக இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் நீதிமன்றங்களுக்கு இணையானது என்றும் தனக்கு நீதிமன்றங்களுக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று தன்னிச்சையாக பொது மக்களை ஏமாற்றியும் ஆள்மாறாட்டம் செய்தும் பொய்யான ஆவணங்களை தயார் செய்தும் பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததன் பேரில் இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  அனிதா ஆரோக்கியமேரி உதவி ஆய்வாளர்கள்  சாகுல் ஹமீது மற்றும் அமரஜோதி மற்றும் காவலர்கள் சகிதம் தலைமறைவாக இருந்த எதிரி மரியசூசை வியாகுலம் 64/21, த/பெ. யாக்கோபு, பார்ப்பனச்சேரி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை கைப்பற்றி IM 1 நீதிமன்றத்தில் ஆஜர் செய்தும் மேற்படி எதிரியை 24.09.2021 வரை நீதிமன்ற காவலுக்கு அடைக்க உத்தரவிட்டதன் பேரில் மேற்படி எதிரி பெரம்பலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பொதுமக்கள் யாரும் போலி இசைவு தீர்ப்பாயத்தை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்