தேனி – செப்-26,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் சரக டிஐஜி விஜயலட்சுமி உத்தரவின்பேரில்
தேனி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் வட்டார ஆட்டோ ஓட்டுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .. தலைமை உரையாற்றிய டிஎஸ்பி முத்துக்குமார் கூறுகையில் கூட்டத்தில் அடையாளம் தெரியாத, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வெளி மாநிலங்கள், மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் ஆட்டோக்களில்பயணம் செய்தாலோ, பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரியும் நபர்களை கண்டறிந்தாலோ, காவல்துறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களை தடுத்திடும் வகையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அவற்றை தடுத்திட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாயினும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்திடும் வகையில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் ஆட்டோக்களில் ஏறினாலோ, தவறுகள் நடப்பதை கண்டாலோ அவற்றை தடுத்திட முன்வர வேண்டுமாயினும், ஆட்டோக்களில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்லக் கூடாது, ஆட்டோ ஓட்டுநர்கள் நல்ல முறையில் முடி திருத்தம் செய்திருக்க வேண்டும் என்றும், ஜாதிய வாசகங்கள் அடங்கிய பிரச்சினைகளை தூண்டுவகையில் உள்ள எழுத்துக்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் சமுதாய அக்கரையுடன் செயல்பட வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டதுடன் தமது செல்போன் எண் 9498186926 ஐ அனைவருக்கும் வழங்கி 24 மணி நேரமும் தொடர்பு கொண்டும், ஆட்டோ ஓட்டுநர்களும் இணக்கமான நட்புறவு பேணவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி, தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமாறன் , போக்குவரத்து காவல ஆய்வாளர் வைரமணி, சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவல் துறையினர் மற்றும் பெரியகுளம் வட்டார ஆட்டோ ஓட்டுகர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவல்துறை, சார்பாக பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் மீனாட்சி கூறுகையில் குழந்தைகள் திருமணம் முற்றிலும் ஒழிக்க வேண்டும், சாதி மனப்பான்மையை அடியோடு ஒழித்து மக்களிடையே ஒற்றுமையைப் பேணிக் காத்து வழிநடத்திச் செல்ல வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.. பின்பு ஆட்டோ ஓட்டுகர்கள் சார்பில் பொதுமக்களுக்கு நன்மை பேணும் விதத்தில் சமூக அக்கரை கொண்ட உறுதி மொழி டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.