93.1 F
Tirunelveli
Tuesday, May 24, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

திருநெல்வேலி – செப் -30,2021

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்குதமிழக முதலமைச்சரின்‌‌‌ பொது நிவாரண நிதி ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நெ. மணிவண்ணன் இ.கா.ப., வழங்கினார்.

கடந்த 19.08.2019 அன்று பத்தமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுடலைமுத்து என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதே போன்று நாங்குநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் திரு. ஆறுமுகம் அவர்கள் 29.11.2019 அன்று விபத்தில் காலமானார். மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து என்பவரது குடும்பத்திற்கும், இரண்டாம் நிலை காவலர் ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப., வழங்கி, ஆறுதல் கூறினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மார்கெட்டில் முன்விரோத கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

0
நெல்லை மாநகரம் - மே-23,2022 நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

“குவாரியில் சிக்கியிருந்த 4,நபர்களின்‌‌‌ உடல்கள் 8,நாட்களுக்கு பிறகு காவல்துறை, தீயனைப்புதுறை மற்‌‌‌றும்‌‌‌...

0
திருநெல்வேலி - மே -23,2022 திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்...

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

0
விழுப்புரம் - மே- 23,2022 அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 20,21,22 ஆகிய...

இறகுபந்து போட்டியில்‌‌‌ தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!

0
மதுரை - மே-23,2022 திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில்‌‌‌ உயிழந்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2500 போலீசார்‌‌‌...

0
தூத்துக்குடி - மே -20,2022 தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

தற்போதைய செய்திகள்