76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி விபத்தில் சிக்கியவரை மின்னல் வேகத்தில் மருத்தவமனைக்கு கொண்டு சென்‌‌‌று உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய போலீசாருக்‌‌‌கு எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

விபத்தில் சிக்கியவரை மின்னல் வேகத்தில் மருத்தவமனைக்கு கொண்டு சென்‌‌‌று உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய போலீசாருக்‌‌‌கு எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

தூத்துக்குடி – செப் -21,2021

தூத்துக்குடியில் சாலை விபத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டு.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரி அருகே 18.09.2021 அன்று மாலை 6 மணியளவில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முன் வரவில்லை. ஆனால் அந்த வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன், சண்முகையா, சுடலைமணி மற்றும் மகேஷ் ஆகியோர் சற்றும் தாமதிக்காமல் அவர்கள் வந்த காவல் வாகனத்திலேயே அவரை ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்து, அவரது உயிரைக் காப்பாற்றினர். இதனை அப்போது பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், தான் உட்பட அங்கு நின்று கொண்டிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன் வராத நிலையில் போலீசார் காப்பாற்றியது குறித்து போலீசாரின் இச் செயலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மேற்படி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய போலீசாருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறை மட்டுமல்ல பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு 2014ம் ஆண்டு ‘குட் சமாரிட்டன் சட்டம்” (Good Samaritan Laws) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம், உதவுபவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை, அதே போன்று காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள் ஆனால் காவல்துறையால் சாட்சி, அது, இது என்று தங்களுக்கு பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவ யாரும் முன்வருவதில்லை. உதவி செய்ய முடியாவிட்டாலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு இலவச தொலை பேசி எண் 108ற்கோ அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண். 100க்கோ பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். ஆகவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அவர்களது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்