86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவை- தனியார் நிறுவன உரிமையாளர்‌‌‌களுக்‌‌‌கு மாவட்ட எஸ்.பி புதிய உத்தரவு

கோவை- தனியார் நிறுவன உரிமையாளர்‌‌‌களுக்‌‌‌கு மாவட்ட எஸ்.பி புதிய உத்தரவு

கோயம்புத்தூர் – செப் -24,2021

குற்றங்களை தடுக்க
விரைந்து குற்றங்களை கண்டுபிடிக்க
வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சரியான முறையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும்

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், நடக்கக்கூடிய குற்றங்களை விரைவில் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டும் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். அதாவது கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் எடுத்துக்காட்டாக கொலை, கொள்ளை, கஞ்சா & குட்கா விற்பனை செய்தல் ஆகிய குற்ற செயல்களில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, குற்றங்களைத் தடுக்கும் பொருட்டும், குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கூறியதாவது தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வரும் வடமாநில தொழிலாளிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், வட மாநிலத் தொழிலாளர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.

சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தற்போதைய செய்திகள்