திண்டுக்கல் – செப் – 30,2021
திண்டுக்கல் மாவட்டத்தில் காலை நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள Modern Control Room -ல் E Beat என்ற செயலியை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசனி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டா புத்தகத்திற்கு பதிலாக E Beat app மூலமாக அந்த Beat location |சென்று E Beat ஆப் மூலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்கேள் செய்து துல்லியமாக கண்காணிக்க முடியும்.
திண்டுக்கல் நகர் உட்கோட்டத்தில் 129 இடங்களிலும், திண்டுக்கல் ஊரக உட்கோட்டத்தில் 312 ஆக மொத்தம் 441 இடத்தில் Beat location இன்று அறிமுகப்படுத்த உள்ளனர். கூடிய விரைவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1508 இடங்களில் Beat location அறிமுகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படும்.