94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி டேக்வாண்டோ சாம்பியன்‌ ஷிப்‌‌‌ போட்டியில் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி எஸ்.பி பாராட்டு

டேக்வாண்டோ சாம்பியன்‌ ஷிப்‌‌‌ போட்டியில் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி – செப்-04,2021

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 28.8.2021 மற்றும் 29.08.2021 ஆகிய இரு நாட்கள திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 22 பேரும், மாணவிகள் 19 பேரும் மேற்படி டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளனர். அவர்கள் 41 பேரையும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்கூடத் தலைவர் திரு. ஜெகஜீவன், பயிற்சியாளர் கிறிஸ்டோபர், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்