கன்னியாகுமரி – செப்-05,2021
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS தலைமையில் மாதாந்திர குற்ற கூட்ட மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
சென்ற மாதத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருள்களை மீட்ட மற்றும் தங்களது புலன்விசாரணயில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவிப்புரிந்த CCTNS ஆப்ரேட்டர்கள், வழக்குநாட்குறிப்பு எழுத்தர்கள் மற்றும் காவலர்களுக்கு என மொத்தம் 47 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.