திருநெல்வேலி – செப் -23,2021
தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்.இ.கா.ப , மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களான திருக்குறுங்குடி டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, அடையகருங்குளம் S.A.ராஜா கலைக்கல்லூரி, கள்ளிகுளம் டி.டி.எம்.என்.எஸ் கல்லூரி, விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி, வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.