திண்டுக்கல் – செப் -24,2021
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் நகர் போக்குவரத்து காவல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களிடையே அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்
மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையோடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்,
நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர், நகர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.