தூத்துக்குடி – செப் – 19,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி உதயசூரியன், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், தூத்துக்குடி மதுவிலக்கு பாலாஜி, காவல் ஆய்வாளர்கள் அன்னராஜ், முத்தையாபுரம் ஜெயசீலன் மற்றும் கோவில்பட்டி கிழக்கு சுஜித் ஆனந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், ஸ்ரீவைகுண்டம் .வெங்கடேசன், கோவில்பட்டி உதயசூரியன், விளாத்திக்குளம் பிரகாஷ், சாத்தான்குளம் கண்ணன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், செல்வி. பவித்ரா, செல்வி. ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.