கோயம்புத்தூர் – செப் – 21,2021
கோவை மாவட்டத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் கண்ணன், கோவில்பாளையம் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் , நிலைய பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எழுத்தர் கோவிந்தராஜ், சிறந்த முறையில் CCTNSல் கோப்புகளை பதிவேற்றம் செய்த சூலூர் காவல் நிலைய காவலர் சுரேஷ், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து திறம்பட செயல்பட்ட பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய தலைமைக் காவலர் நாட்டுத்துரை ஆகியோர்களுக்கு
சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் சிறந்த காவல் நிலையமாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை தாலுகா காவல் ஆய்வாளரிடம் மற்றும் சிறந்த உட்கோட்டமாக பொள்ளாச்சி உட்கோட்டத்தை தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையினை உட்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி ஆகியோருக்கு் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., வழங்கி
கௌரவப்படுத்தினார்கள். ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்பட செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.