திண்டுக்கல் – செப் – 04,2021
திண்டுக்கல் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை வாகனத்தில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த வாசகங்களும், தொலைக்காட்சி வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு காணொளிகளும் இவ்வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு வாகனத்தின் பணியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா உடன் இருந்தார்