81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட எஸ்.பி தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி – செப் – 28,2021

புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கிடைய கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அதை தவிர்ப்பதற்காகவும், கண்டிக்கும் பொருட்டும் 10 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு இன்று விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில்‌‌‌ நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் மாணவ, மாணவியர்களாகிய நீங்கள்தான் வருங்காலத்தூண்கள், சாதனையாளர்களாக உருவாக்க கூடிய இடம் பள்ளி கூடம், பள்ளிக்கூடத்தில் கல்வியையும், ஒழுக்கத்தையும் நன்கு கற்க வேண்டும், மாணவர்கள் அந்த ஒழுக்கத்தை கடைபிடித்து தங்களுக்குள் பிரச்சனை இல்லாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் இதனால் அரசாங்க வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். அதனால் மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் சொல்லை கேட்டு ஒழுக்கத்தை கற்று கொண்டால் வருங்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளர்களாக வர முடியும், இந்த வயதில் கல்வி ஒன்று மட்டுமே உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவ மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் சிராஜுதீன், நிர்மலா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கூட்டத்தில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், உதவி ஆய்வாளர் கண்ணன் தனிப்‌‌‌பிரிவு காவலர்‌‌‌ ஜோதி உட்பட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பெற்றோர், மாணவ மாணவிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்