80.7 F
Tirunelveli
Saturday, July 2, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மாணவ மாணவியருக்கு சமுகவலைதள குற்றங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி தலைமையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவியருக்கு சமுகவலைதள குற்றங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி தலைமையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி – செப் -14,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (14.09.2021) மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன்  முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது கணினி வழி செயல்பாடுகள் சூப்பர் மார்க்கெட் முதல் அனைத்து இடங்களிலும், நிறுவனங்களிலும் அவசியமான ஒன்றாக உள்ளது. தற்போது வீட்டில் இருந்து கொண்டே செல்போன் அல்லது கணினி மூலம் ஆன்லைனில் பணபரிமாற்றம் செய்வது முதல் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். இது அறிவியல் வளர்ச்சி என்றாலும் அதில் நமக்கே தெரியாமல் நாம் கவனிக்காமல் கணினி வழி குற்றங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதனை பற்றிய அறிவும் விழிப்புணர்வும் கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதே போன்று ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வங்கியில் இருந்து வங்கி அதிகாரி பேசுவது போன்று யாரேனும் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை கேட்டால் எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம். பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் தலைமையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர்  சிவசங்கரன், உதவி ஆய்வாளர்  சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், வரலாற்று துறை தலைவர் முனைவர் . தேவராஜ், வணிகவியல் துறை தலைவர் முனைவர் பொன்னுதாய், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார், தென்பாக தனிப்பிரிவு தலைமை காவலர்  மாரிக்குமார் மற்றும் காவல்துறையினர் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
தூத்துக்குடி - ஜீலை -01,2022 திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...

0
சென்னை ஆவடி -ஜீலை -01,2022 செய்தியாளர் - கே.நியாஸ் இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...

திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது

0
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!

0
திருநெல்வேலி - ஜீலை -01,2022 மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்‌‌‌கள்...

0
திருவாரூர் - ஜீன் -30,2022 களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை திருவாரூர்...

தற்போதைய செய்திகள்