தஞ்சாவூர் – செப் – 13,2021
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார், இ.கா.ப., தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், கஞ்சா உற்பத்தி செய்து சப்ளை செய்யும் முதல் வகை குற்றவாளிகள் முதல் அதை சில்லறை வியாபாரமாக விற்பனை செய்யும் கடை நிலை குற்றாவாளிகள் வரை கூண்டோடு கைது செய்ய 14.08.2021-ந்தேதி தஞ்சாவூர் மாவட்ட, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் நேரடி மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் மணிவேல் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், கந்தசாமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை ஒன்றை நியமித்தார். முதல் கட்டமாக மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை குற்றத்தை செய்து வந்த பல்வேறு காவல் நிலையங்களில் NBW-நிலுவையில் உள்ள திருப்பனந்தாள் HS Rowdy சந்திரன் தலைமையிலான 6-பேர் கொண்ட கஞ்சா விற்பனை கூட்டத்தை 20.08.2021 ந்தேதியன்று 12-கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள இந்த கஞ்சா கடத்தல் நெட்வெர்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரை தனிப்படையினர் தேடி கண்டுபிடித்து தங்களது விசாரணைக்கு கொண்டு வந்தனர். மேற்படி விசாரணையில் தஞ்சாவூர் சரக மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் குற்றத்தை செய்து வரும் சென்னையை சேர்ந்த கௌதம், நாகப்பட்டினத்தினை சேர்ந்த குஷ்பு என்கிற அன்பு, திண்டுக்கலை சேர்ந்த சரவணன் ஆகியோர்கள் இந்த குற்றத்தை செய்து வரும் விபரம் தெரிந்து அவர்களது செல்போன் எண்களின் CDR-பெறப்பட்டும், போலீஸ் விசாரணையில் இருந்த நபர் மற்றும் CDR-தகவலின்படி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கஞ்சாவை சப்ளை செய்யும் நபர்களின் விபரம் தயார் செய்யப்பட்டு, தொடர்ந்து நேரடியாக விசாகப்பட்டினம் சென்றும், மேற்படி நபர்களின் விபரங்கள் களத்தில் விசாரிக்கப்பட்டு, அந்த விசாரணையில் மேற்படி கும்பல் அடுத்த கஞ்சா கடத்தலுக்கு தயாராகியது தெரியவந்துள்ளது. மேற்படி போலீஸ் விசாரணையில் இருந்த நபர் கொடுத்த தகவலின்படியும், களவிசாரணையில் தனிப்படை மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இருந்தும் AP05 BC 4646, AP31 AQ 9506 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு கார்களில் கஞ்சா கடத்த உள்ளதையும், மேற்படி இரண்டு கார்களும் தஞ்சை மாவட்ட பகுதிக்குள் எந்த மெயின் ரோட்டில் கிராஸ் செய்ய போகிறது என்ற விபரத்தினை சேகரித்தும், உடனே தஞ்சாவூர் மாவட்ட, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் தலைமையில் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் மணிவேல் தலைமையிலான தனிப்படையினர் அவர்களது ஒரு காரையும், திருவாருர் மாவட்ட கூத்தாநல்லுார் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் மற்றொரு காரையும் CDR மற்றும் Informer தகவலின்படி பின்தொடர்ந்து சென்று 10.09.2021 ந்தேதியன்று 2-கார்களில் 120 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தினை சேர்ந்த 6-முக்கிய குற்றவாளிகளுடன் சென்னையை சேர்ந்த கௌதம், நாகப்பட்டினத்தினை சேர்ந்த குஷ்பூ என்கிற அன்பு, திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் ஆகிய 9-நபர்களையும் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேற்படி குஷ்பூ என்கிற அன்பு, திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் ஆகியோர்கள் மீது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் NBW மற்றும் சில வழக்குகளில் கைது செய்யபடாமல் உள்ளனர். மேலும் இவர்கள் விசாகப்பட்டினத்தில் மொத்தமாக கஞ்சாவை கொள்முதல் செய்து டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் மதுரை, திண்டுக்கல், ஈரோடு, பல்லடம் ஆகிய ஊர்களிலும் விற்பனை செய்தும் அண்டை நாடான ஸ்ரீலங்காவிற்கும் கஞ்சா கடத்தல் செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது போன்ற கஞ்சா குற்ற வழக்குகளில், கஞ்சாவை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த மெச்சதகுந்த பணியை பாராட்டி தனிபடையினர்களை ஊக்குவிக்கும் விதமாக தனது அலுவலகத்திற்கு அழைத்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார், இ.கா.ப., சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்