80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் விபத்து 4,பேர் பலி -மாவட்ட எஸ்.பி நேரில் விசாரனை

தூத்துக்குடியில் விபத்து 4,பேர் பலி -மாவட்ட எஸ்.பி நேரில் விசாரனை

தூத்துக்குடி – செப் – 09,2021

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாநத்தம் அருகே இன்று காலை சுமார் 6 மணி அளவில் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனும், தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி சென்ற தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் பயணம் செய்த சில்லாநத்தம் பகுதியை சேர்ந்துவர்களான கணேசன் மனைவி செல்வராணி (45), ரவீந்திரன் மனைவி காமாட்சி (எ) ஜோதி (40), முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா (48) மற்றும் நடுவக்குறிச்சி காலனியை சேர்ந்த அடைக்கலாஜ் மகள் மணிமேகலை (20) ஆகிய 4 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு தூத்துகுடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயம்பட்டவர்கள் 10 பேரையும் காப்பாற்றி அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அவருடன் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு, புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் உட்பட காவல்துறை அதிகாரிகள்மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார், தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மேற்படி தண்ணீர் லாரி ஓட்டுனரான புதியம்புத்தூர் நயினார்புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் பண்டாரம் (41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்