திருநெல்வேலி – செப் -17,2021
முன்னீர்பள்ளம் வடுவூர்பட்டி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சங்கர சுப்பிரமணியன்(37).என்பவரை 13.09.2021 அன்று வடுவூர்பட்டி டாஸ்மார்க் அருகே மர்மநபர்களால் வழிமறித்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் 15.09.2021 அன்று இக்கொலையில் ஈடுப்பட்ட கொத்தன் குளத்தைச் சேர்ந்த மந்திரம் என்பவரது மகன் மகாராஜா என்ற ராஜா(20), கண்ணன் என்பவரது மகன் பாண்டி என்ற பாண்டியன் என்ற சீயான் பாண்டியன் (31), திருநெல்வேலி டவுன் பாறையடியை சேர்ந்த தாசன் என்பவரது மகன் சீதாராமகிருஷ்ணன் என்ற பப்பி(24), கொத்தன்குளத்தைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் பிரபாகரன்(26), ரத்தினசாமி என்பவரது மகன் அரவிந்த் மற்றும் கொத்தன்குளத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற சீயான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கொத்தன்குளத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் ராஜகுரு(37), பச்சை பெருமாள் என்பவரின் மகன்களான விக்னேஸ்வரன்(28), சரவணகுமார் (29), மற்றும் வேலு என்பவரின் மகன் மாரிமுத்து(28) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.